வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி, பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “காலா” திரைப்படம் திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“கபாலி” திரைப்படத்தை அடுத்து, ரஜினி – ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் காலா திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம், திரையரங்க உரிமையாளர்கள் போராட்டம் போன்ற காரணங்களால் புதிய திரைப்படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், காலா திரைப்படம் ஜூன் மாதம் 7 ஆம் தேதி வெளியாகும் என, படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், ஈஸ்வரி ராவ், சாக்ஷி அகர்வால் என பல முக்கிய நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.