யூடுபை தெறிக்க விடும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அறிமுக திரைப்படத்தின் டிரைலர் !
யூடுபில் இந்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாய்ரட் என்ற பெயரில் வெளியாகி மெகா ஹிட் அடித்த மராத்தி மொழி திரைப்படம், இந்தியில் தயாராகியுள்ளது.
”தடக்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் நாயகியாக, நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி அறிமுகமாகிறார். ஜூலை 20ஆம் தேதி வெளியாக உள்ள தடக் திரைப்படத்தின் டிரைலர் நேற்று யூ டியூப்பில் வெளியானது.
காதல், இசை, நடனம் என கலகலப்பாக அமைந்துள்ள இந்த டிரைலர், பெரும் வரவேற்பைப் பெற்று வெளியான ஒரே நாளில் ஒரு கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.