மௌன ராகம் சீரியலால் பேபி கிருத்திகாவுக்கு ஏற்பட்ட சோகம்..!
மௌன ராகம் என்ற சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரங்களில் பலரின் மனதை கவர்ந்துள்ளார் வேலன் என்கிற கிருத்திகா.
வேலன் என்று கூறினால் தான் இவரை அதிக பேருக்கு அடையாளம் தெரியும். பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் மௌன ராகம் சீரியலில் இவருக்கு தான் முக்கிய ரோல் என்றே கூறலாம். இவர் சமீபத்திய ஒரு பேட்டியில், எனக்கு பெங்களூரில் பள்ளி படிக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் சீரியலால் என்னால் அங்கு படிக்க முடியவில்லை.
சீரியல் முடிந்ததும் உடனே அங்கு போய் படிப்பேன். எனக்கு ஆங்கில பாடம் மிகவும் பிடிக்கும், அதில் தான் நிறைய மதிப்பெண் எடுப்பேன் என்று கூறியுள்ளார்.