மூத்த நடிகைகள் பாலியல் தொல்லை பற்றி பேச வேண்டும்!ஹூமா குரேஷி

Default Image
ரஜினிகாந்துக்கு  தமிழில் வெளியான காலா திரைப்படத்தில் ஜோடியாக நடித்தவர்களில் ஒருவர் ஹூமா குரேஷி. இந்தி திரையுலகில் பிரபல நடிகையான இவரிடம் செய்தியாளர்கள், ஹாலிவுட்டில் புகழ் பெற்ற #மீடு பிரசாரம் (#MeToo) பாலிவுட்டிற்கு இன்னும் வரவில்லை என நீங்கள் மனவருத்தம் அடைந்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த குரேஷி, அது நடக்க போவதில்லை (இந்தி திரையுலகம்). ஹாலிவுட்டில் மூத்த மற்றும் மதிப்பிற்குரிய பல நடிகைகள் இதுபற்றி பேசியுள்ளனர்.
Related image
அதனால் அதற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. இந்தியாவிலும் இதுபோல் நடைபெற வேண்டும் என உண்மையில் நான் நம்புகிறேன். அதற்காக இறைவனை வேண்டி கொள்கிறேன்.
ஆனால் இது திரை துறையில் நடைபெற வேண்டும் என்று மட்டும் நான் உணரவில்லை. வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இது நடைபெற வேண்டும் என கூறியுள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ள நிலையில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் பற்றி அவர்கள் பேச முற்படுவதில்லை. திரைப்படங்களில் நடிப்பவர்களை நாம் எப்படி காண்கிறோம்? என்றும் யோசிக்க வேண்டும். இது வீட்டில் இருந்தே தொடங்குகிறது.
ஒரு பெண் பாலியல் துன்புறுத்தல் பற்றி கூற முன்வருகிறார் எனில் அவரது நடத்தையில் குறை காணும் முயற்சியை நாம் தொடங்க கூடாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்