முதல் தடவையா இருந்தாலும் வித்தாயசமான அனுபவமாக இருந்துச்சாம்!!!!!!

Default Image

ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேசன் என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் ‘உன்னால் என்னால்’. இந்த படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் இயக்குனர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். அதிரடி வில்லி கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் நடிக்கிறார்.
மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ் அவருக்கு செக்ரட்டியாக இருக்கும் சோனியா அகர்வால், ராஜேஷை கொலை செய்து விட்டு அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார். அந்த வலையில் ஜெகா, உமேஷ், ஜெயகிருஷ்ணா ஆகிய மூவரும் வந்து சிக்குகிறார்கள்.
முகமது ரிஸ்வான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘பணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று தான். தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை.. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத் தான் போக வேண்டும்.
காதல் கொண்டேன், கோவில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த சோனியா அகர்வால், தற்போது முதல் முறையாக ஒரு படத்தில் வேறொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer
Israel Hamas Ceasefire