முக்கிய தலைவருக்கு ஆவணப் பாடம் தயாரிக்கும் பா.ரஞ்சித்…..!!!
- பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்.
- இயக்குனர் ஜோதி நிஷா மற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் அம்பேந்தகரின் ஆவண படம் உருவாகவுள்ளது.
பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர். இவை மக்களுக்கு சமுதாய சிந்தனைகளை தூண்டக் கூடிய படங்களை இயற்று வதில் கைதேர்ந்தவர்.
இந்நிலையில், தற்போது இவர் ஆவண பட இயக்குனர் ஜோதி நிஷாவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். அவர்கள் தயாரிக்கும் படம் அம்பேத்காரை பற்றிய ஆவண படமாக அமைய உள்ளது.
மேலும் இந்த படத்தில் அம்பேத்கரின் மதம் குறித்த பார்வை, சுதந்திரம், இந்தியாவில் புராணங்கள், இந்திய அரசியலில் சாதி, ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களின் நிலை உள்ளிட்ட காரியங்கள் குறித்து இந்த படத்தில் எடுக்க உள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும், இந்த படத்திற்கு, பி.ஆர். அம்பேத்கர் இன்றும் நாளையும் என தலைப்பு வைத்துள்ளனர்.