மீ டூ விவகாரம் – மேனகா காந்தியிடம் சின்மயி புகார்
- இந்நிலையில்,தமிழ் சினிமாவின் பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறினார்.
- சின்மயி பதிவுக்கு மத்திய மந்திரி மேனகா காந்தி அளித்த பதில் ட்விட்
மீடூ இயக்கம் பெண்கள் தங்கள் துறைகளில் இருக்கும் ஆண்கள் மூலம் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்த தொடங்கப்பட்டது.
இதில், பல பெண்கள் தங்களது புகார்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில்,தமிழ் சினிமாவின் பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறினார்.
சின்மயி புகாரின் மீது எந்த நடவடிக்கையும் இல்லாததால் இந்த விவகாரம் குறித்து அவர் மத்திய மந்திரி மேனகா காந்தியிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், சின்மயி பதிவுக்கு மத்திய மந்திரி மேனகா காந்தி அளித்த பதில் ட்விட்டில், “உங்களது புகாரை தேசிய மகளிர் ஆணையத்திடம் எடுத்துச் சென்றுள்ளேன். உங்களது விவரங்களை செய்தியில் அனுப்பவும்” என்று தெரிவித்துள்ளார்.