மீண்டும் மெகா ஸ்டாருடன் ஜோடி சேரும் ராய் நடிகை …!
பல்வேறு திரைப்பட விழாக்களில் தமிழில் மம்மூட்டி நடித்துள்ள பேரன்பு படம் பங்கேற்று விருதுகள் வென்று வருகிறது.
இதையடுத்து அவர், மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில்,ஒய்.எஸ்.ஆர் வேடத்தில் நடிக்கும் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் மலையாளத்தில் அவர் நடிக்கும் படம், குட்டநாடு பிளாக். இதில் ராய் லட்சுமி, பூர்ணா ஹீரோயின்கள்.
கேரளாவிலுள்ள குட்டநாடு என்ற இடத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தை சேது இயக்குகிறார். ஏற்கனவே ராஜாதி ராஜா உள்பட சில படங்களில் மம்மூட்டியுடன் ராய் லட்சுமி நடித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.