மீண்டும் சினிமாவில் நுழைந்த நடிகை நக்மா…..!!!
- நடிகை நக்மா 1990-களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர்.
- நடிகை நக்மா 2 தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளார்.
நடிகை நக்மா 1990-களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். அதன் பின் இவர் காங்கிரசில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். நீண்ட காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கி, மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,அரசியலுக்கு சென்ற பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தேன். மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளேன். எல்லா மொழி படங்களிலும் நடிக்க திட்டமிட்டு உள்ளேன். தற்போது 2 தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.