மீண்டும் கூட்டணி சேரும் இரு துருவங்கள்..!
நடிப்பில் தனது ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை தான் ஜோதிகா.இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மா இவரது சகோதரி ஆவார். நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார்.இவர் தமிழுக்கு வாலி படம் மூலம் அறிமுகமானார்.
இதே போல நடிப்பில் லிட்டில் சூப்பர்ஸ்டார் ஆகா திகழும் சிம்பு , தனது சிறு வயதிலிருந்தே நடிக்க தொடங்கிவிட்டார். இவர் நடிப்பில் மட்டுமல்லாம்,அழ இசை, பாடலாசிரியர், பாடகர், வசனம், நடனம் என பல திறமைகளைக் கொண்டுள்ளார். இவர் முன்பு இருந்தே தனக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்டல் ஜோதிகா என்று தான் கூறுவார்.
ஜோதிகா நடித்து வரும் ‘காற்றின் மொழி’ படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு ‘நடிகர் சிம்பு’வாகவே நடிக்கிறார்.பல வருடங்களுக்குப் பிறகு சிம்பு-ஜோதிகா மீண்டும் ஜோடி சேரவுள்ளனர்.’செக்க சிவந்த வானம்’ என்ற படம் தான் அது. இந்த கூட்டணி எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.