மீண்டும் இணையும் விக்ரம் வேதா ஜோடி! மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் வெற்றி திரைப்படம்!

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சார்லி. இந்த படத்தை மார்ட்டின் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தில் பார்வதி நாயர் ஹீரோயினாக நடித்து இருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய வெற்றி பெற்றது.
இப்படத்தை தமிழில் மாதவன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் படம் எப்போது ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகாமல் இருந்தது.
தற்போது இதுபற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தினை திலீபன் எனும் புதுமுக இயக்குனர் இயக்க உள்ளாராம். இப்படத்தில் நயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க உள்ளாராம். மாதவனும் ஷ்ரதா ஸ்ரீநாத்தும் விக்ரம் வேதாவில் இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025