இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேகம்’ படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் மாதமே வெளியானது.படத்தின் எதிர்பார்ப்பு படம் அறிவித்த நாள் முதலே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் இசையமைப்பாளர் யார், படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க இருக்கும் நாயகி யார், என்பது போன்ற விவரங்கள் அறிவிக்கப்படாமலே இருந்தது.
இன்று படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ‘பில்லா, ஏகன், ஆரம்பம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நயன்தாரா மீண்டும் அஜித் ஜோடியாக நடிக்கப் போகிறார்.
படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.
‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி கடைசி வாரத்தில் ஆரம்பமாக உள்ளதாகத் தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…