"மீடூ"சர்சையில் சிக்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்..!!

Default Image

அதிகரித்து வரும் பாலியல் சர்ச்சைகளில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் சிக்கியுள்ளார்.
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக பலரும் ‘மீ டூ’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சமுக வலைதளங்களில் தங்களது குரலை பதிவிட்டு வருகின்றனர்.இந்தியாவிலுள்ள பல முக்கிய பிரபலங்களும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.  இந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் சிக்கியுள்ளார்.
சமீபத்தில்  மீ டூ பற்றிய வலைதள பதிவிற்கு அமிதாப் பச்சன் ஆதரவு தெரிவித்திருந்தார். அதை ரீ-டிவீட் செய்த சிகை அலங்கார நிபுணர் சப்னா பவ்நானி ,” பிங்க் திரைப்படம் வெளியாகி கடந்துவிட்டது. அதேபோல் உங்கள் போராளி முகத்திரையும் கிழிந்துவிடும். “என்று பதிவிட்டிருந்தார். இது பாலிவுட்டில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதையடுத்து சப்னா,” பச்சனின் தவறான நடத்தை பற்றி பல கதைகளை தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கிறேன். அந்த பெண்கள் வெளியே வர வேண்டும். அவரது போலித்தனம் மிகவும் சோர்வடந்து விட்டது” என்று பதிவிட்டிருந்தார்.இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்