மாரி 2 வில் அராத்து ஆனந்தியாக மலர் டீச்சர்..!!!அசத்தும் லூக்கில் டீச்சர்..!!

Default Image

மாரி 2 படத்தில் நடிகை சாய் பல்லவியின்  ‘அராத்து ஆனந்தி’ என்ற கதாபாத்திரத்தில் வெளியாகியுள்ளது.

Image result for maari 2

நடிகர் தனுஷ் நடிக்க இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2’. இந்த படத்தில் மலையாள படமான பிரேமம் புகழ் சாய் பல்லவி இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமார்,வினோத் , டொவினோ கிருஷ்ணா,தாமஸ்,ரோபோ சங்கர், என பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.மாரியில் ரவுடி டானாக நடித்து விட்டு மீண்டும் டான்னாக ‘மாரி2வில்’தனுஷ் திரும்பியிருப்பதற்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். படம் டிசம்பரில் ரிலீஸ் ஆவதை அந்த படத்தின் போஸ்டர் உறுதி செய்கிறது.இந்த படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்திருக்கிறார்.  படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் வேலைப்பாடுகள் முடிந்து வரும் நிலையில் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவடைய கதாபாத்திரத்தையும் படக்குழு போஸ்டராக வெளியிடுகிறது. இதன் முன்னோட்டமாக அப்படத்தின் ஹீரோயின் சாய் பல்லவியின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.அதில்  ‘அராத்து ஆனந்தி’ என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளார்  சுடிதாருக்கு மேல் காக்கிச் சட்டை அணிந்து ஆட்டோ ஒட்டும் பெண்ணாக பார்ப்பதற்கு வித்தியாசமான கேரக்டரில் இருக்கிறது இது அவருடைய ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்