தனியார் கல்லூரி நிர்வாகம் நடிகை பிரியா வாரியாரைப் போல கண்ணடிப்பவர்கள் மீது ஒரு வருட சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளதால் மாணவிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஒரு அடார் லவ்’ மலையாள படத்தின் ‘மாணிக்ய மலராய பூவி’ பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகி வருகிறார்.
இதில் நடித்துள்ள பிரியா வாரியர் செய்யும் கண் மற்றும் புருவ அசைவுகள் வீடியோ வெளியான சில நாட்களிலேயே சமூக வலைதளங்களில் எண்ணிக்கை லட்சங்களை எட்டியது.பிரியா வாரியர் செய்யும் கண் மற்றும் புருவ அசைவுகள் இளைஞர்களையும், இளம் பெண்களையும் கட்டிப்போட்டுள்ளது.
இதை தொடர்ந்து, பிரியா பிரகாஷ் வாரியரை போன்றே விளையாட்டாக கண் அடித்து பலர் சமூக வலை தளத்தில் வீடியோ வெளியிடுகிறார்கள். மேலும் கல்லூரி பெண்கள் பிரியா பிரகாஷ் வாரியாரைப் போல கல்லூரி வகுப்பு அறையில் கண்ணடித்து கலவரம் செய்கின்றனர்.
இந்நிலையில், கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவிகள் வகுப்பில் அதே வேலையை செய்கிறார்களாம். கோவை, கோவைப் புதூரில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரியில் நடிகை பிரியா வாரியார் போல் மாணவிகள் யாராவது கண்ணடித்தால் ஒரு வருடம் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவி வருகிறது.
எனினும் இதனை மறுத்துள்ள கல்லூரி நிர்வாகம், எங்கள் கல்லூரி லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி இவ்வாறு வலை தளங்களில் வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…