மழை வெள்ளம் : அடியோடு பாதிப்புக்கு உ ள்ளானா மலையாள சினிமா
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பெருவெள்ளத்தால்,மாநிலத்தில் 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெளிமாநில மக்கள் உதவி வருகிறார்கள். தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த மழைவெள்ளம் காரணமாக மலையாள திரையுலகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளன. மழை வெள்ள பாதிப்புக்குள்ளான 10 மாவட்டங்களில்,பெரும்பாலான தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. மாநிலமே பெரும்சோகத்தில் உள்ளதால், மக்கள் சினிமாக்கொண்டாட்டத்தை தவிர்க்கின்றனர். இதனால் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்து நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக இப்போதைக்கு படம் வெளிவர வாய்ப்பில்லை என்பதல்முடிந்த படங்கள் முதலீட்டுக்கு வட்டி காட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது. படப்பிடிப்புகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால், சினிமா தொழிளார்கள், தொழிநுற்ப கலைஞர்கள்,வேலை வாய்ப்புகளை இழந்து தவிக்கின்றனர்.
அடுத்தடுத்து வெளிவர இருந்த தா மம்முட்டி நடித்துள்ள, ஒரு குட்ட நாடன் பிளாக், மோகன்லால், நிவின்பாலி நடித்துள்ள காயன்குளம் கொச்சுன்னி,பகத் பாசில் நடித்துள்ள வரதன்,உள்ளிட்ட படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற ஓணம் பண்டிகைக்குள் நிலைமை சரியாகவிட்டால்,ஓணம் படம் வெளியீட்டிலும் மந்த நிலையே நீடிக்கும் என்று தெரிகிறது.