தமிழில் மக்கள் செல்வன் என்று மகுடம் சூட்டப்பட்டு கொண்டாடப்படுபவர் விஜய் சேதுபதி இவர் தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளைத் தொடர்ந்து தற்போது மலையாளத்திலும் அறிமுகமாகவுள்ளார்.
தமிழில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழில் பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அதனை வெற்றி பெற வைப்பவர்.தற்போது முதல்முறையாக தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.இவர் அறிமுகமாக உள்ள தெலுங்கு படமான சைரா நரசிம்ம ரெட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்சிவி மற்றும் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன், சுதீப் நடிகை நயன்தாரா ஆகிய பிரம்மாண்ட கூட்டணியில் கை கோர்கிறார்.இந்த படம் தொர்பாக சமீபத்தில் ஒகேனக்கலில் நடிகர் சீரஞ்சிவி, சுதீப் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது தெலுங்கு படப்பயணத்தைத் தொடர்ந்து அப்படியே மலையாளத்திலும் விஜய் சேதுபதி அறிமுகமாக உள்ளார் .இயக்குநர் சனில் இயக்கத்தில் நடிகர் ஜெயராம் நாயகனாக நடிக்கும் ‘Marconi Mathai’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த’பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘விக்ரம் வேதா’ மற்றும் ’96’ உள்ளிட்ட பல படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த ‘சீதக்காதி’ படத்துக்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…