மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சியில் பிரபலங்களுக்கு நடந்த அவமானம். அப்படி என்னத்தான் நடந்தது அங்கு…??
மலேசியாவில் கோலாகலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் எல்லோரும் சேர்ந்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும், புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு வந்த 130 பிரபலங்கள் அவமானப்படுத்தப்பட்டு விமான நிலையம் வந்தும், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்நிகழ்ச்சி நடிகை ராதிகாவுக்கும், சரத்குமாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்று ஏற்கெனவே தகவல் வந்தது. அதோடு நேற்று எஸ்.வி. சேகரும் தனது டிவிட்டர் பக்கத்தில் “விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது யாரையும் அவமானப்படுத்தாமல் கலை நிகழ்ச்சியை நடித்தி முடித்தார்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.