மசாஜ் செய்ய சொல்லி முத்தம் கொடுத்து மிரட்டி படுக்கைக்கு அழைத்தார் என, டைரக்டர் மீது நடிகை ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
இந்தி பட உலகில் பிரபல டைரக்டராக இருக்கும் சுபாஷ் கை போதை பொருள் கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் கூறி இருந்தார். இப்போது நடிகையும், மாடல் அழகியுமான கேட் சர்மாவும் சுபாஷ் கை பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
“என்னை சுபாஷ் கை அவரது வீட்டுக்கு அழைத்தார். நான் அங்கு சென்றபோது 5, 6 பேர் இருந்தனர். அவர்கள் முன்னால் தனக்கு மசாஜ் செய்துவிடும்படி கூறினார். நானும் பெரிய டைரக்டர் என்பதால் மறுக்கவில்லை. சில நிமிடங்கள் அவருக்கு மசாஜ் செய்துவிட்டு கை கழுவுவதற்காக பாத்ரூம் சென்றேன்.
என் பின்னாலேயே சுபாஷ் கையும் வந்துவிட்டார். உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் என்று சொல்லி எனது கையை பிடித்து இழுத்துக்கொண்டு அவரது அறைக்கு சென்றார். அங்கு என்னை கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்க முயன்றார். நான் அவர் பிடியில் இருந்து விடுபட்டு கிளம்ப தயாரானேன். உடனே இன்று இரவு என்னுடன் தங்காவிட்டால் படத்தில் அறிமுகம் செய்ய மாட்டேன் என்று மிரட்டினார்.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
DINASUVADU
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…