மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் புதிய டிவி அவதாரம்!!!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வளர்ந்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. டிசம்பர் 20 இல் சீதகாதி படமும், பொங்கலன்று சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக பேட்ட படமும் வெளிவருகிறது.
இதனை அடுத்து தெலுங்கில் பிரமாண்டமாக வெளிவரவுள்ள சைரா நரசிம்ம ரெட்டி படமும் வெளிவரவுள்ளது. இந்த பிசியான பட வேலைகளிலும், தற்போது சண் டிவியில் ஒரு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
DINASUVADU