மக்கள் செல்வனின் சீதக்காதி பட புரோமோஷனை தற்போதே ஆரம்பித்த படக்குழு! இந்த இடத்தில் சிலை வைத்து அசத்தல்!!!
வருடத்திற்கு ஒரு படம் நடித்து அதனை ஹிட்டாக்க கதாநாயகர்கள் போராடி வருகின்றனர். ஆனால் வருடத்திற்கு அரை டஜன் படங்கள் நடித்து அத்தனையும் ரசிகர்கள் ரசிக்கும் படி கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. அவரது நடிப்பில் 96 படத்தினை தொடர்ந்து சீதக்காதி படம் ரிலீஸாக உள்ளது.
சீதக்காதி திரைப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ரம்மா நம்பீசன், ஐஸ்வர்யா ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இத்திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு புரோமோஷனை தற்போதை தொடங்கியுள்ளது.
சென்னை எக்ஸ்ப்ரஸ் அவென்யு ஷாப்பிங் மாலில் சீதக்காதி படத்தின் விஜய் சேதுபதி கதாபாத்திரமான அய்யா ஆதிமூலம் கதாபாத்திரத்தின் சிலையை அங்கு இன்று வைத்துள்ளனர்.
source : cinebar.in