மக்களின் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியமா?செல்லும் இடமெல்லாம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பிரசாரங்கள் தொடரும்!கமல் ஹாசன்….

Published by
Venu

மக்களின் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியம் என நினைக்க வேண்டுமா ? என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார்.

 

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நான் ஆதரவாக களமிறங்க தயார் என்று கமல் அறிவித்திருந்தார்.

 

இதன் பிறகு போராட்டக் குழுவினர் அவரை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி அழைப்பு விடுத்தனர். இதனால் இன்று (ஏப்ரல் 1) கமல் ஹாசன் தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார்.குமாரரெட்டிபாளையத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டார் கமல்ஹாசன்.

இந்நிலையில் புள்ளிவிவரங்களோடு களத்தில் சந்திப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது என அவர் கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், மக்கள் உயிரை பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை, மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை. மத்தியில் இருப்போருக்கு கேட்கவேண்டும் குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் ஒலிக்கும் குரல் மத்திய அரசிற்க்கு கேட்க வேண்டும். இங்கு இருக்கும் அரசுக்கு கேட்ட மாதிரியே தெரியவில்லை.நான் நடிகன் என்பதைவிட மனிதன் எனக்கு கட்சி இருந்தாலும் தனி மனிதனாகவே வந்திருக்கிறேன். ஸ்டெர்லைட் போராட்ட களத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 49 ஆம் நாளாக போராடும் குமரெட்டியாபுர மக்களுடன் மக்களாக அமர்ந்து கமல்ஹாசன் பேசிய கமல்ஹாசன், நான் அரசியல்வாதியாகவோ சினிமா நடிகனாகவோ இங்கு வரவில்லை, ஒரு தனிமனிதனாக வந்துள்ளேன்.

நான் தமிழன், உங்களுடனான என் உறவு வெறும் மொழியால் மட்டும் ஏற்பட்டதல்ல உணர்வாலும் ஏற்பட்ட உணர்வு இது.உங்கள் மூச்சு பட்ட இந்த வேப்பமரத்து காற்று எனக்கு புது உத்வேகத்தையும் உற்சாகத்தையுன் தந்துள்ளது.குற்றம் கடிதல் அரசின் வேலை, அதை அரசு செய்யவில்லை என்றால் மக்கள் செய்வார்கள்” என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் கமல்ஹாசன் பேசியது,  காவிரி விவகாரத்தில் எனக்கு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பில்லை என்றும்  தேவைக்கு அதிகமான விளம்பரம் கிடைத்துள்ளது . அதற்காக இங்கு வரவில்லை.மக்களின் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியம் என நினைக்க வேண்டுமா ? அப்படி எனில் குடியிருப்புப்பகுதியில் இருந்து ஆலையை அகற்ற வேண்டும். மத்திய அரசும், தமிழக அரசும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் பாராமுகமாக நடந்து கொள்கின்றன.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படும் இடம் சிப்காட்டில் உள்ளதா என ஆய்வு தேவை. இப்போது ஆய்வு செய்வதால் எந்த உபயோகமும் இல்லை.ர்லைட் ஆலையை மூடுவது தான் நல்லது. குடியிருப்பு, விவசாய பகுதிகளில் ஆலை அமைப்பது தவறு.நான் செல்லும் இடமெல்லாம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பிரசாரங்கள் மேற்கொள்வேன். அதனால் உண்மை நிலை தெரியாது என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Recent Posts

எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…

4 hours ago

100 நாள் வேலைத் திட்டம் ஊதிய நிலுவைத் தொகை : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…

5 hours ago

பொங்கல் திருநாள் : த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து!

சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…

5 hours ago

“பின் வாங்குற பழக்கம் இல்லை “.. இட்லிகடை ரிலீஸ் தேதியை உறுதி செய்த தனுஷ்!

சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…

5 hours ago

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…

6 hours ago

H1B விசா கொள்கையில் மாற்றம் வருமா? கலகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.!

நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…

6 hours ago