மகத் -இருட்டு குத்து நாயகி காதலா?
பிக்பாஸ் நிகழ்ச்சி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில்,நாளாக நாளாக சூடு பிடிக்கிறது. நிஜ கணவன் மனைவியான பாலாஜி – நித்யா இடையேயான சண்டை சுவாரஸ்யமாக மாறி வருகிறது. சண்டையோ சமாதானமோ இருவரும் ஓவராக செல்கிறார்கள்.
அதுபோல்,மகத் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் படுத்திருந்த கட்டிலில் அவர்களுக்கு நடுவில் படுத்துக்கொண்டார். இதுவும் பலர் மத்தியில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
யாஷிகாவுக்கும் மகத்துக்குமான நெருக்கம் அதிகரித்து வருகிறது. இருவரும் காதலித்து விடுவார்களோ? காதலிக்கிறார்களா? என்றும் பார்வையாளர்கள் பலரும் பேசிவருகிறார்கள். பொன்னம்பலம் வீட்டில் நடப்பவற்றை பிக்பாசிடம் போட்டுக்கொடுக்கிறார் என்று அவர்மீது கடுப்பில் இருக்கிறார்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள். அவரை வீட்டை விட்டு வெளியேற்ற திட்டமிடுகிறார்கள்.