பேட்டயால் தள்ளிபோகிறதா………விஸ்வாசம்…….!!!பொங்களுக்கு வருவதில் சிக்கல்……வெளியான தகவல்…!!!

Default Image

நடிகர் ரஜினி இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய படம் பேட்ட இந்த படம் கபாலி,காலா போன்ற படங்களை போல் இந்த படம் இருக்காது வித்தியசமான படமாக இருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
Image result for viswasam
இந்நிலையில் ரஜினி நடிக்கும் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவது குறித்து படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித்- இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனியை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Related image

இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடிகர் அஜித் நடித்து வருவதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் `தூக்கு துரை’ என்று தகவல்கள் வெளியாகின.சமீபத்தில் தான் இந்தப் படத்தில் தெலுங்கு நடிகரான ரவி அவானா இணைந்தார்.
தற்போது விஸ்வாச படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் மிகப்பெரிய ஆடிட்டோரியம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுவதாகவும். ஐதராபாத்தில் இந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன் மும்பையில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின.
Related imageவிஸ்வாசம் ஏற்கனவே தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பின்னர் படப்பிடிப்பு வேலைகள் முடிவடையாததால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்,நடிகர் ரஜினி நடிக்கும் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவது குறித்து படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்