புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சூர்யா, விஜய் சேதுபதியின் நிதியுதவி! இத்தனை லட்சங்களா?!
கஜா புயலின் தாக்கத்தால் டெல்டா விவசாயிகள், மீனவர்கள் என பலரும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்னும் மின்சாரம், தண்ணீர், உணவு என அடிப்படை தேவைகள் கூட முழுதாக சேரவில்லை. அவர்களுக்கு தற்போதுதான் பல தன்னார்வலர்களும் உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகர் சூர்யாவின் குடும்பம் ஏற்கனவே 50 லட்சத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியாக கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் 25 லட்சம் மதிப்பிலான பொருட்களை புயலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுப்ப்பியுள்ளார்.
source : cinebar.in