புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 40 லட்சம் நிதியுதவி அளித்த தளபதி விஜய்!
கஜா புயலினால் டெல்டா மாவட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அடிப்படை தேவைகளான உணவு, தண்ணீர், இருப்பிடம் கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால் பல தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களால் நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். சூர்யா குடும்பத்தினர் 50 லட்சம் நிதியுதவி அளித்தனர்.
விஜய் சேதுபதி 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். சிவகார்த்ததிகேயன் 20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நிவாரண பெருட்களை 2 லாரி நிறைய அனுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து தளபதி விஜய் நிதியுதவி அளித்துள்ளார். அவர் 2 முதல் 4.5 லட்சங்களாக நிதியை பிரித்து வெவ்வேறு வங்கி கணக்குகளில் செலுத்தியுள்ளார். ஆக மொத்தம் 40 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
source : cinebar.in