புது அவதாரத்தில் பிரணீதா?சமாளிப்பபரா பிரணீதா….
சிம்பு, கவுதம் மேனன், அனிருத் என பலர் தமிழில் தனியாக இசை ஆல்பங்களை உருவாக்குகிறார்கள். நடிகை பிரணீதா அப்படிப்பட்ட ஒரு ஆல்பத்தில் சேர்ந்துள்ளார்.
இவர் தமிழில் உதயன், சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய படங்களில் நடித்தவர்.
நடிகை பிரணீதா சுபாஷ் தற்போது இந்தி இசை ஆல்பத்தில் நடித்து வருகிறார். சான் கித்தன் என்ற இந்த ஆல்பத்தை இந்தியில் சூப்பர் ஹிட்டான துமாரி சுலு படத்தின் இயக்குனர் சுரேஷ் திரிவேணி இயக்குகிறார்.
(இந்தப் படம் தமிழில் காற்றின் மொழி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஜோதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்). சான் கித்தான் ஆல்பத்தில் இந்தி நடிகர் ஆயுஷ்மன் குர்ரானா போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவர் காதலியாக பிரணீதா நடிக்கிறார். குளுமையான பிரதேசங்களில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.