புதிய செண்டிமென்டில் காலடி வைத்த கீர்த்தி சுரேஷ்..!
மலையாளத்தில் கீதாஞ்சலி படம் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் வெற்றி படமாக அமைய முன்னணி கதாநாயகியாக முன்னேறினார்.
அதன் வெற்றியை தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம் என்று முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவந்தார். நடிகையர் திலகம் படம் மூலம் நம்பர் ஒன் அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்ட கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்திவிட்டதாக செய்தி வருகிறது.
கீர்த்திசுரேஷ் அடுத்து நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் யாவும் ‘எஸ்’ வரிசையில் அமைந்துள்ளன. விஜய்யுடன் ‘சர்கார்’, விஷாலுடன் ‘சண்டக்கோழி 2’, விக்ரமுடன் ‘சாமி2’, சிவகார்த்திகேயனுடன் ‘சீமராஜா’ (கவுரவ வேடம்) என ‘எஸ்’ எழுத்தில் வரும் தலைப்புகளில் நடித்து வருகிறார்.