பிரியங்கா சோப்ராவை தயாரிக்கும் நிறுவனம் இந்தியர்களிடம் மன்னிப்பு கோரியது!

Default Image
 இந்தியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் பிரியங்கா சோப்ரா நடிக்கும் குவான்டிகோ சீரியலில் காட்சி இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
Image result for priyanka chopra
குவான்டிகோ என்ற அமெரிக்க தொலைக்காட்சி சீரியலில் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா  நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவர் சி.ஐ.ஏ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Image result for priyanka chopra
மிகவும் பிரபலமான இந்த சீரியலில் சமீபத்தில் வெளியான ஒரு எபிசோடில், இந்தியாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாகிஸ்தானியர் போல நடித்து நியூயார்க் நகரில் அணு குண்டை வெடிக்க சதி செய்வது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இந்த காட்சிக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. சமூக வலைதளங்களில் சீரியலை பலர் காரசாரமாக விமர்சிக்க வேறு வழியின்றி சீரியல் தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்