ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘கொரில்லா’. ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மற்றும் பலர் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி நடிக்கிறார்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா பேசும் போது, ‘இந்தியாவில் முதன்முதலாக சிம்பன்சி குரங்குடன் நடிகர்கள் இணைந்து நடிக்கும், இந்த கொரில்லா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்று முடிவடைந்தது.
இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக நூற்றுக்கணக்கான திரைப்பட தொழிலாளர்களின் உழைப்பில் சென்னையின் புறநகரில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த அரங்கத்தில் நடிகர்கள் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் ராதாரவி ஆகியோருடன் ஆயிரம் துணை நடிகர் நடிகைகள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘கொரில்லா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்படும்.’ என்றார். டான் சாண்டி இயக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைக்கிறார்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…