பிரபாகரனை மீண்டும் கொண்டு வரும் பாபிசிம்ஹா…!!மிண்டு எழும் சீறும் புலியாக வேலுப்பிள்ளை…!!!
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கேப்டன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.இதனை முன்னிட்டு சீறும்புலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
படக்குழு வெளியிட்டுள்ள இந்த போஸ்டரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அணிந்திருக்கும் ராணுவ உடையில் பாபி சிம்ஹா தோன்றமளிக்கிறார். மேலும் அவர் அருகில் அமைதியாக ஒரு புலி உள்ளது அதன் தலைமேல் கைவைத்தபடி நாற்காலியில் கம்பீரமாக நடிகர் பாபி சிம்ஹா அமர்ந்துள்ளார்.
இலங்கை என்றால் பிரபாகரன் தான் மக்களுக்கு சட்டென்று நினைவிற்கு வரும் அப்படி மக்கள் தலைவனாக விளங்கியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் வாசகங்கள் படக்குழுவில் வெளியிட்ட போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் அதில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளியாகவில்லை ஆனால் ஹூரோவாக பாபி சிம்ஹா நடிக்கிறார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. மேலும் படத்தை ஸ்டுடியோ 18 நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வெங்கடேஷ் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளான இன்று அவரின் வாழ்க்கைவரலாற்றான #சீறும்புலி திரைப்படத்தின்முதல் பார்வை!!!
இத்திரைப்படத்தில் #BobbySimhaa கதாநாயகனாக நடிக்கிறார்இத்திரைப்படத்தை எழுதி இயக்குகிறார் @dirvenkatesh #HBDprabhakaran64 #SeerumPuli #HBDprabhakaran @onlynikil pic.twitter.com/5k8r9x4KEM
— Nikil Murukan (@onlynikil) November 26, 2018
DINASUVADU