Categories: சினிமா

பிரபல பாலிவுட் நடிகையின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Published by
Dinasuvadu desk

நடிகை அனுஷ்கா சர்மா இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் . இவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்த பிறகு அவரது புகழ் மேலும் கூடியது. திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிப்பது மட்டுமின்றி தூய்மை இந்தியா திட்டத்தில் தூதுவராக இருக்கிறார்.

சமீபத்தில் சொகுசு காரில் பயணித்தபடி சாலையில் குப்பையை வீசியவரை காரிலேயே விரட்டிச்சென்று கண்டித்து கணவர் மூலம் அதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டார்.

இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவின் சொத்து விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளன. இவருக்கு இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகிகளாக இருக்கும் தீபிகா படுகோனே, கங்கனா ரணாவத்துக்கு இணையாக பட வாய்ப்புகள் குவிகின்றன.

ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என்று பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார். விளம்பரங்களிலும் சம்பாதிக்கிறார். ஒரு படத்தில் நடிக்க ரூ.9 கோடி சம்பளம் வாங்குகிறார். இது தென்னிந்திய நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகம். விளம்பர படத்தில் நடிக்க ரூ.4 கோடி வாங்குகிறார்.

மும்பையில் அனுஷ்கா சர்மா வசிக்கும் வீட்டின் மதிப்பு ரூ.9 கோடி. இந்த வீடு 2014-ல் ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டது. அனுஷ்கா சர்மாவின் தற்போதைய மொத்த சொத்து ரூ.220 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

4 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

5 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

5 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

5 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

6 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago