பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானைக் கொல்ல ஸ்கெட்ச் போட்ட நிழல் உலக தாதா!
நிழல் உலக தாதாவான சம்பத் நெஹ்ரா பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானைக் கொல்ல முயற்சித்ததாக தெரிவித்துள்ளான்.
இதற்காக மும்பை சென்று இரண்டு நாட்களாக சல்மான் கானைப் பின்தொடர்ந்த அவன், ரகசியமாக படங்களை எடுத்து, பால்கனியில் சல்மான்கான் நிற்கும் போது தூரத்தில் இருந்து குறிபார்த்து சுட்டுக் கொல்ல துப்பாக்கி வாங்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளான்.
ஹைதராபாதில் கடந்த புதன்கிழமை சிறப்பு அதிரடிப் படையால் கைது செய்யப்பட்ட சம்பத் நெஹ்ரா, ஹரியானா மாநிலம் குர்கிராமுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டான். அவன் மீது ஏராளமான கொலை, கொள்ளை, கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.