பிரபல இயக்குநரின் அடுத்த படத்தில் விஸ்வரூபம் நாயகி….!!

Default Image

தமிழில் நிமிர், காஞ்சிவரம் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்த பிரியதர்சன், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெற்றி பெற்ற படத்தை பாலிவுட்டில் ரீ-மேக் செய்ய உள்ள நிலையில், அதில் முக்கிய வேடத்தில் நடிக்க விஸ்வரூபம் படத்தின் நாயகி பூஜா குமார் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
தமிழில் 2000-ம் ஆண்டு வெளியான காதல் ரோஜாவே என்ற படம் மூலம் அறிமுகமானவர் பூஜா குமார். அந்த படமும் சரி, அடுத்து வந்த படமும் சரி ப்ளாப் ஆனதால் வெளிநாட்டுக்கு சென்ற அவர் ஆங்கில படங்களில் மட்டும் அவ்வப்போது நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2013-ம் ஆண்டு விஸ்வரூபம் மூலம் தமிழ் திரையுலகுக்கு மீண்டும் கமல்ஹாசன் அவரை கூட்டி வந்தார்.
அதனை தொடர்ந்து உத்தமவில்லன், விஸ்வரூபம்-2 என தொடர்ந்து கமல் உடன் மட்டும் நடித்து வந்த அவர் வேறு படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார். இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பிரியதர்சன் பாலிவுட்டில் இயக்க உள்ள படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ’தி இன்விசிபிள் மாஸ்க்’ என்ற பெயரில் தயாராகும் இந்த படம் மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.தமிழில் நிமிர், காஞ்சிவரம், சில நேரங்களில் உள்ளிட்ட பல படங்களை பிரியதர்சன் இயக்கியுள்ளார். இவரது காஞ்சிவரம் படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்