பிரகாஷ் ராஜை இழிவுபடுத்திய பாஜக எம் பிக்கு நோட்டீஸ்…!
பத்திரிகையாளர் கவுரி படுகொலையை பிரதமர் கண்டிக்காமல் இருப்பது நியாயமல்ல என்று நடிகர் பிரகாஷ் ராஜ் சொன்னதற்காக அவரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி சமூகவலைத் தளங்களில் தொடர்ந்து பதிவுகளைப் போட்டிருக்கிறார் சிம்ஹா. எழுப்பப்பட்ட நியாமான விமர்சனத்திற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் விமர்சித்தவரை தரக்குறைவாகத் தாக்கியிருக்கிறார் மைசூரின் பாஜக எம் பி பிரதாப் சிம்ஹா.அக்கட்சி எம் பி யின் யோக்யதையே இப்படித்தான் இருக்கிறது என்றால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்று ஊகித்துக் கொள்ளலாம். அதற்காக பிரகாஷ் ராஜ் பயந்து பின்வாங்கவில்லை. அந்த எம்.பி க்கு
வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.