பிரகாஷ்ராஜ் தான் என் தந்தை யார் இந்த நடிகை ..!
நடிகர் பிரகாஷ்ராஜ் இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர்ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்.அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.மேலும் கில்லி படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.
இவர் தற்போது பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இருவரும் தெலுங்கில் ஹலோ குரு பிரேமகோசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரகாஷ்ராஜுக்கு மகளாக நடிக்கிறார் அனுபமா. படப்பிடிப்பின் போது, அனுபமா அவருடன் தகராறு செய்ததாகவும், அதனால் இருவரையும் செட்டில் இருந்து இயக்குனர் வெளியேற்றியதாகவும் செய்திகள் வந்தன.
இதை அனுபமா மறுத்துள்ளார். ‘பிரகாஷ்ராஜ் எனக்கு தந்தை போன்றவர். நான் அவருடன் சண்டை போடவில்லை என்றும், இந்த செய்தி தனக்கு சிரிப்பாக உள்ளதாகவும் கூறினார்.