கடந்த ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் பெரும்பாலான குடும்பங்களை ஆக்கிரமித்துக் கொண்டன.
நாளுக்கு நாள் வெளியில் இந்த நிகழ்ச்சிக்கான எதிர்ப்பு போராட்டங்கள் அதிகரித்ததை தொடர்ந்து தமிழகத்தின் செய்தி ஊடகங்களில் பிக் பாஸ் விவாதப் பொருளானது.
அவ்வப்போது தனது அரசியல் கருத்துகளை மேடையில் பேசிய கமல்ஹாசன் இன்று மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிவிட்டார். அப்படி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ், ஓவியா, காயத்ரி ரகுராம், ஸ்ரீ, ரெய்ஸா, சக்தி, வையாபுரி, சினேகன், உள்ளிட்ட 19 போட்டியாளர்களின் தற்போதைய நிலையை பார்க்கலாம்.
ஓவியா : பிக் பாஸ் போட்டியின் மூலம் இவருக்கு ஆர்மி உருவாக்கப்பட்டது. ரசிகர்கள் கொண்டாடினர். லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவின் புகழை அடைந்த இவருக்கு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் தற்போது காஞ்சனா 3, 90 எம்.எல், களவாணி 2 , முனி 4 ஆகிய 4 படங்களில் ஓவியா நடித்து வருகிறார்.
ஜூலி : ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களுக்கு பரிச்சயமான ஜூலி , பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவை இழந்து அதிக விமர்சனத்திற்குள்ளானார். அப்போது இவரை வைத்து மீம்ஸ்களும் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேரமுடியாமல் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து உத்தமி என்ற படத்திலும் ஜூலி நடித்து வருகிறார். மேலும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணிபுரியும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
நமீதா : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அதிகம் படங்களில் நடிக்காத இவர் தயாரிப்பாளர் வீரேந்திர சௌத்ரியை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். தற்போது டி.ராஜேந்தருடன் இணைந்து படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரைஸா : அதிகம் தமிழ் தெரியாத இவர் தற்போது பியார் பிரேமா காதல் என்ற படத்தில் சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்து வருகிறார்.
சுஜா : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்தில் நடித்த இவர் வா டீல் என்ற படத்திலும் நடித்தார். இதை தவிர்த்து நீண்ட காலமாக தான் காதலித்து வந்த நடிகர் சிவக்குமாரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.
பிந்து மாதவி : அதிகம் சர்ச்சைகளின்றி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிந்து மாதவி தற்போது புகழேந்தி எனும் நான் என்ற படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். முன்னதாக இவரது நடிப்பில் ’பக்கா’ படம் வெளியானது
கணேஷ் வெங்கட் ராம் : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி படத்தில் நடித்தார்.
காயத்ரி ரகுராம் : சேரி பிகேவியர் என்ற வார்த்தையால் சர்ச்சைக்குள்ளான இவர் யாதுமாகி என்ற படத்தை இயக்கியுள்ளார். தற்போது வரை நெட்டிசன்களால் தொடர்ந்து விமர்சிக்கப்படும் நபராக உள்ளார்.
சினேகன் : ஓவியாவுடன் இவர் நடிப்பதாக இருந்த படம் இன்னும் தொடங்கவில்லை. கமலின் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
ஆரவ் : நிகழ்ச்சியில் வெற்றியாளரான இவர் தற்போது இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரணி : 2010 – ம் ஆண்டு முதல் 2016 வரை 3 படங்கலில் நடித்த இவர், கடந்த வருடம் மட்டுமே நான்கு படங்களில் நடித்துள்ளார். சசிகுமாருடன் நாடோடிகள் 2 படத்திலும் நடித்துள்ளார்.
சக்தி : நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பெறிய மாற்றங்கள் எதுவும் நடடைபெறவில்லை. புதிய பட அறிவிப்புக்ளும் இன்னும் வெளியாகவில்லை.
வையாபுரி : கலகலப்பு 2, பக்கா ஆகிய இரு படங்களில் நடித்தார் . மேலும் பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
ஆர்த்தி : தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். கலக்கப்போவது யாரு, ஸ்டார் வார்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
கஞ்சா கருப்பு: நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடித்த நிமிர் படம் வெளியானது.
காஜல் பசுபதி : நிகழ்ச்சியின் பாதியில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இவரது நடிப்பில் கலகலப்பு 2 வெளியானது
ஹரிஷ் கல்யாண் : யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ரைஸாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
அனுயா: 2012 – க்கு பிறகு இவர் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஸ்ரீ : ஆரம்பக்கட்டத்திலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இவருக்கு 2017-ம் ஆண்டு மாநகரம் படம் மட்டுமே வெளியாகியுள்ளது. புதிய பட அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை