பிக்பாஸ்-2 : வீட்டில் சண்டை..! வெளியேறப்போவது யார்..! அதிர்ச்சியில் குழு..!
முதல் நாளே பற்ற வைத்த நெருப்பாட்டம் பிக்பாஸ்-2 சீசன் பரபரப்பையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் துவங்கிடுச்சு. கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசனில் முதல் நாளிலேயே போட்டியாளர்கள் நடுவில் சண்டை வெடிக்க துவங்கியுள்ளது. காமெடிக்காக சிலர் பேசும் பேச்சுகள் மனக்கசப்பை உண்டாகியுள்ளது. இதனால் பரபரப்பும் எழுந்துள்ளது.
நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவர் மனைவி இடையே உள்ள சண்டை பற்றி பல மாதங்களுக்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்டது. அதனால் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
“என மனைவியுடன் மறுபடியும் சேர்வதற்காக தான் நான் பிக்பாஸ் வந்திருக்கிறேன்” என அவர் கூறினார். இந்நிலையில் இன்று பிக்பாஸ் கொடுத்த டாஸ்கில் பாலாஜியிடம் “உங்களுக்கு பிடித்த நபர் யார்?” என கேட்கப்பட்டது.
அனைவரும் அவர் நித்யாவை தான் கூறுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ சென்ட்ராயன் என கூறிவிட்டார். மேலும் இன்று நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவர் மனைவி இடையே சண்டையும் வந்தது.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/l3BBTkX8z9
— Vijay Television (@vijaytelevision) June 20, 2018