பிக்பாஸ் வீட்டில் 60 நாள் இருந்துட்டேன்… இதை செய்யமாட்டேனா காயத்ரி
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது விதி.
தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் தற்போது ட்விட்டரில் ஒரு அரசியல் கட்சிக்கு அதரவாக பேசிவருகிறார். அதனால் பலர் அவரை விமர்சித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் இப்படி தொடர்ந்து நடந்தால் தான் ட்விட்டரில் இருந்து வெளியேறுவேன் என்றும் மொபைல் கூட இல்லாமல் இருப்பேன் என்றும் கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் 60 நாட்கள் இருந்துவிட்டேன், மொபைல் இல்லாமல் இருப்பது எனக்கு கஷ்டமில்லை என காயத்ரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.