பிக்பாஸ் வீட்டில் இருந்து கமல்ஹாசனையே வெளியேற்றிய பிக்பாஸ்!
கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டை சுற்றிக் காண்பித்த பின், கன்பெஷன் ரூமுக்கு சென்ற நிலையில் பிக்பாஸ் வெளியேற்றினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஓவியா, ஜூலி, நமீதா, காயத்ரி, சினேகன், ஆரவ், சக்தி, ரைசா, கணேஷ், வையாபுரி, பரணி, கஞ்சா கருப்பு எனப் பலர் கலந்து கொண்டனர். 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில், தினம் தினம் பிக்பாஸ் சொல்லும் கட்டளைகளுக்கு ஏற்ப வேலை செய்வதும், பங்கேற்பாளர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படுவதாகவும் இருக்கும். பங்கேற்பாளர்களுக்கிடையேயான உரையாடலில் நகைச்சுவை, கோபம், சண்டை, என்று வெளிப்படும் நவரசங்களும் ரசிகர்களை கவர்ந்தன. இதே போல் 2வது சீசனான பிக்பாஸ் 2 நிகழ்ச்சியும் புதிய பங்கேற்பாளரோடு ஜாலியாக இருக்கும் என்றே சொல்லலாம்.
இன்றைய தொடக்க நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டை கமல்ஹாசன் சுற்றி காண்பித்தார். ஒவ்வொரு அறையாக சென்று செய்யப்பட்டுள்ள மாற்றங்களையும் கவனித்து மக்களுக்கு சொன்னார். பின்பு கன்ஃபெஷன் ரூமில் சென்று பிக் பாஸ் உடன் பேசினார்.
அப்போது, ”எப்படி இருக்கீங்க பிக்பாஸ்” என்று நலம் விசாரித்த கமலை பார்த்து, பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததற்கு வாழ்த்து கூறிவிட்டு, நீங்கள் ’செல்லலாம்’ என்று பிக்பாஸ் தடாலடியாக சொல்லிவிட்டார். அதற்கு “ ஓ கேள்வி மட்டும் தான் கேட்பீர்களா, பதில் கிடையாதா ” என்று சிரித்தவாறு சொல்லிக்கொண்டே வெளியேறினார் கமல்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.