பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் அதிரடி கைது..!!
BIG BOSS முன்னாள் போட்டியாளர் அர்மான் கோலி சென்ற மாதம் தன்னுடைய காதலி நீருவை தாக்கியதாக ஒரு வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.பின்னர் சமரசம் ஏற்பட்டதால் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.மும்பையில் உள்ள அவரது வீட்டில் அதிக அளவு மதுபானத்தை பதுக்கி வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டிற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பதுக்கியஅனைத்தும் வெளிநாட்டில் வாங்கிய scotch whiskey என கூறப்படுகிற நிலையில் சட்டப்படி இதனை ஒருவர் ஒரு மாதத்திற்கு 12 யூனிட் மட்டுமே வைத்துக் கொள்ளமுடியும் என்பதாலும் அவ்வாறு வெளிநாட்டில் இருந்து வருகின்ற போது 2 மட்டுமே கொண்டு வர முடியும் என்கிற இந்த விதிமுறையை மீறிய குற்றச்சாட்டிற்காக அர்மான் கோலி கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் மீது Bombay Liquor Prohibition Act, 1949 செக்ஷன் 63(E) வழக்கு பதிவுச்செய்யப்பட்ட படி 3 வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.