பிக்பாஸ் பிரபலங்களின் தற்போதைய நிலை..!

Default Image

கடந்த ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களின் விருப்பமான நிகழ்சியாக தற்பொழுது மாறியுள்ளது. ஆரம்பத்தில் நிறைய எதிர்ப்புகளை இந்நிகழ்ச்சி பெற்றாலும் இறுதியில் இந்நிகழ்ச்சி 100 நாட்கள் நடந்து மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிகழ்ச்சி அனைவருக்கும் பிடிக்க இரண்டே விஷயம் தான் காரணம். ஒன்று கமல் நிகழ்சியை தொகுத்து வழங்கிய விதம் மற்றும் நிகழ்சியின் வழியே அவர் கூறிய சீரிய அரசியல் கருத்துகள். மேலும் ஒவியா உயரிய குணம்.

தற்பொழுதுபிக்பாஸ் 1 ல் கலந்து கொண்ட 19 போட்டியாளர்களின் தற்போதைய நிலையை பார்க்கலாம்.

ஓவியா :Related imageஇவர் பிக்பாஸ் வீட்டில் 1 முதல் 41ஆம் நாள் வரை இருந்தார். பின் அவரே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் போட்டியின் மூலம் இவருக்கு ஆர்மி உருவாக்கப்பட்டது. ரசிகர்கள் கொண்டாடினர். லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவின் புகழை அடைந்த இவருக்கு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் தற்போது காஞ்சனா 3, 90 எம்.எல், களவாணி 2 , முனி 4 ஆகிய 4 படங்களில் ஓவியா நடித்து வருகிறார்.

ஜூலி :Image result for ஜூலிஇவர் பிக்பாஸ் வீட்டில் 1 முதல் 42ஆம் நாள் வரை இருந்தார். பின் இவரை நிகழ்ச்சியை விட்டு பிக்பாஸ் வெளியேற்றினார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களுக்கு பரிச்சயமான ஜூலி , பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவை இழந்து அதிக விமர்சனத்திற்குள்ளானார். அப்போது இவரை வைத்து மீம்ஸ்களும் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேரமுடியாமல் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து உத்தமி என்ற படத்திலும் ஜூலி நடித்து வருகிறார். மேலும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணிபுரியும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

நமீதா :Image result for நமீதாஇவர் பிக்பாஸ் வீட்டில் 1 முதல் 28ஆம் நாள் வரை இருந்தார். பின் இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அதிகம் படங்களில் நடிக்காத இவர் தயாரிப்பாளர் வீரேந்திர சௌத்ரியை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். தற்போது டி.ராஜேந்தருடன் இணைந்து படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ரைஸா :Image result for ரைஸாஇவர் பிக்பாஸ் வீட்டில் 1 முதல் 63ஆம் நாள் வரை இருந்தார். பின் இவரை நிகழ்ச்சியை விட்டு பிக்பாஸ் வெளியேற்றினார். அதிகம் தமிழ் தெரியாத இவர் தற்போது பியார் பிரேமா காதல் என்ற படத்தில் சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்து வருகிறார்.

சுஜா :Related imageஇவர் பிக்பாஸ் வீட்டில் 52ஆம் முதல் 91ஆம் நாள் வரை இருந்தார். பின் இவரை நிகழ்ச்சியை விட்டு பின்பாஸே வெளியேற்றினர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்தில் நடித்த இவர் வா டீல் என்ற படத்திலும் நடித்தார். இதை தவிர்த்து நீண்ட காலமாக தான் காதலித்து வந்த நடிகர் சிவக்குமாரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

பிந்து மாதவி :Image result for பிந்து மாதவிஇவர் பிக்பாஸ் வீட்டில் 35ஆம் முதல் 96ஆம் நாள் வரை இருந்தார். பின் இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றினார். அதிகம் சர்ச்சைகளின்றி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிந்து மாதவி தற்போது புகழேந்தி எனும் நான் என்ற படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். முன்னதாக இவரது நடிப்பில் ’பக்கா’ படம் வெளியானது

கணேஷ் வெங்கட் ராம் :Image result for கணேஷ் வெங்கட் ராம்இவர் பிக்பாஸ் வீட்டில் 1 முதல் 98ம் நாள் வரை இருந்தார். இவர் நிகழ்ச்சியில் இறுதி வரை இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி படத்தில் நடித்தார்.

காயத்ரி ரகுராம் :Image result for காயத்ரி ரகுராம்இவர் பிக்பாஸ் வீட்டில் 1 முதல் 56ஆம் நாள் வரை இருந்தார். பின் இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றினர். சேரி பிகேவியர் என்ற வார்த்தையால் சர்ச்சைக்குள்ளான இவர் யாதுமாகி என்ற படத்தை இயக்கியுள்ளார். தற்போது வரை நெட்டிசன்களால் தொடர்ந்து விமர்சிக்கப்படும் நபராக உள்ளார்.

சினேகன் :Image result for சினேகன்இவர் பிக்பாஸ் வீட்டில் 1 முதல் 98ம் நாள் வரை இருந்தார். இவர் நிகழ்ச்சியில் இறுதி வரை இருந்து இரண்டாம் இடம் பெற்றார் என்பது குறிப்பிடதக்கது. ஓவியாவுடன் இவர் நடிப்பதாக இருந்த படம் இன்னும் தொடங்கவில்லை. கமலின் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

ஆரவ் :Image result for ஆரவ்இவர் பிக்பாஸ் வீட்டில் 1 முதல் 98ம் நாள் வரை இருந்தார். இவரே இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பது குறிப்பிடதக்கது. நிகழ்ச்சியில் வெற்றியாளரான இவர் தற்போது இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரணி :Image result for பரணிஇவர் பிக்பாஸ் வீட்டில் 1 முதல் 14 நாள் வரை இருந்தார். பின் இவரை பிக்பாஸ் வெளியேற்றினார். 2010 – ம் ஆண்டு முதல் 2016 வரை 3 படங்கலில் நடித்த இவர், கடந்த வருடம் மட்டுமே நான்கு படங்களில் நடித்துள்ளார். சசிகுமாருடன் நாடோடிகள் 2 படத்திலும் நடித்துள்ளார்.

சக்தி :Image result for சக்திஇவர் பிக்பாஸ் வீட்டில் o முதல் 49ஆம் நாள் வரை இருந்தார். பின் அவரை பிக்பாஸே நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றினார்.நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பெறிய மாற்றங்கள் எதுவும் நடடைபெறவில்லை. புதிய பட அறிவிப்புக்ளும் இன்னும் வெளியாகவில்லை.

வையாபுரி :Image result for வையாபுரிஇவர் பிக்பாஸ் வீட்டில் 1 முதல் 84ஆம் நாள் வரை இருந்தார். பின் அவரை பிக்பாஸே நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றினார். கலகலப்பு 2, பக்கா ஆகிய இரு படங்களில் நடித்தார் . மேலும் பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

ஆர்த்தி :Image result for ஆர்த்திஇவர் பிக்பாஸ் வீட்டில் 1 முதல் 21ஆம் நாள் வரை இருந்தார். பின் அவரை பிக்பாஸே நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றினார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். கலக்கப்போவது யாரு, ஸ்டார் வார்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

கஞ்சா கருப்பு: Image result for கஞ்சா கருப்புஇவர் பிக்பாஸ் வீட்டில் 1 முதல் 14ஆம் நாள் வரை இருந்தார். பின் அவரை பிக்பாஸே நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றினார்.நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடித்த நிமிர் படம் வெளியானது.

காஜல் பசுபதி :Image result for காஜல் பசுபதிஇவர் பிக்பாஸ் வீட்டில் 54 முதல் 70ஆம் நாள் வரை இருந்தார். பின் அவரை பிக்பாஸே நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றினார். நிகழ்ச்சியின் பாதியில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இவரது நடிப்பில் கலகலப்பு 2 வெளியானது

ஹரிஷ் கல்யாண் :Image result for ஹரிஷ் கல்யாண்இவர் பிக்பாஸ் வீட்டில் 53ஆம் முதல் 98ஆம் நாள் வரை இருந்தார். இவரும் போட்டியின் இறுதி வரை இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ரைஸாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அனுயா:Image result for அனுயா: இவர் பிக்பாஸ் வீட்டில் 1 முதல் 7ஆம் நாள் வரை இருந்தார். பின் அவரை பிக்பாஸே நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றினார். 2012 – க்கு பிறகு இவர் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஸ்ரீ :Image result for biggboss ஸ்ரீ ஆரம்பக்கட்டத்திலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இவருக்கு 2017-ம் ஆண்டு மாநகரம் படம் மட்டுமே வெளியாகியுள்ளது. புதிய பட அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park