பிகில் போஸ்டருக்கு எதிராக போராட்டம் நடத்திய இறைச்சி வியாபாரிகள்! விஜய் ரசிகர்கள் செய்த அட்டகாசமான செயல்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில், கோவையில் பிகில் போஸ்டரில் நடிகர் விஜய் கறி வெட்டும் கட்டை மீது செருப்பு இருப்பதாக புகார் எழுந்ததோடு, இது இறைச்சி தொழிலை அவமதிக்கும் விதமாக கூறி, இதனை கண்டித்து இறைச்சி இறைச்சி கடைக்காரர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இறைச்சி கடைக்காரர்களுக்கு தேவையான கரி வெட்டும் கட்டை மற்றும் கத்தியை விஜய் ரசிகர்கள் இலவசமாக வழங்கியுள்ளனர்.