பாலிவுட்டில் கடந்தவாரம் வெளியானப் படம் ‘பாகி – 2’. இதில் டைகர் ஷெராஃப்புக்கு ஜோடியாக நடித்திருந்தார் திஷா பதானி.
இந்தப் படத்தின் வெற்றிக் களிப்பில் இருக்கும் திஷா தனது, அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார்.
கேன்ஸ் பட விழாவில் சுந்தர்.சி அறிவித்த சங்கமித்ரா படம் தான் அது.
400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர்.
முன்னதாக சங்கமித்ரா கதாப்பாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்து, பின்னர் அவர் அதிலிருந்து விலகிக் கொண்டார்.
அதனால் அந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க திஷா பதானி ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குநர் சுந்தர்.சியும் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணியும் ஜூலையில் படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்க தயாராகிவிட்டார்கள்.இதற்காக வாள் சண்டைப் பயிற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார் திஷா.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…