பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் அர்ஜூன் நேரில் ஆஜரானார்..!!
நடிகர் அர்ஜூன் மீதான மீடு பாலியல் புகார் மீதான விசாரணைக்கு ஆஜரானார்.
நாடு முழுவதும் மீடு விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் படப்பிடிப்பின் போது அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த இந்நிலையில் இவருக்கும் கடும் வார்த்தை போர் நடந்து வந்த நிலையில் நடிகர் அர்ஜூன் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில் இந்த பாலியல் புகார் குறித்து விளக்கமளிப்பதற்காக, பெங்களூர் கப்பான் பாக் காவல்நிலையத்தில் நடிகர் அர்ஜூன் ஆஜராகியுள்ளார்.நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கொடுத்த பாலியல் புகார் குறித்து விளக்கமளிக்க பெங்களூர் கப்பான் பாக் காவல்நிலையத்தில் நடிகர் அர்ஜூன் வந்தார்.
அவரின் மீது கப்பன்பாக் போலீசார் FIR பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த புகார் குறித்து விளக்கமளிக்க வருமாறு நடிகர் அர்ஜூனுக்கு சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து, அர்ஜூன் நேரில் ஆஜரானார்.ஆஜரான அவரிடம் சுமார் 20 நிமிடங்கள் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU