பாலியல் தொழிலாளியாக நடித்த நடிகை..!
பாலியல் தொழிலாளிகளைப் பற்றி எடுக்கப்பட்டுள்ள ‘டார்ச் லைட்’ படத்துக்குப் போராடி சான்றிதழ் பெற்றுள்ளார் இயக்குநர் மஜீத்.
விஜய், பிரியங்கா சோப்ரா நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கியவர் மஜீத். அவர் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘டார்ச் லைட்’. சதா, ரித்விகா, புதுமுகம் உதயா, தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா, ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர். 90களில் நடக்கும் கதையான இது, நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில், பிரதான வேடத்தில் சதா நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கினார்கள். ஆனால் நடிகை சதா தைரியமாக நடிக்கச் சம்மதித்தார். வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அப்படிப்பட்டப் பலரையும் சந்தித்துப் பேசி, வீடியோவில் பதிவுசெய்து படமாக்கினேன். கதைக்கு என்ன தேவையோ, அதை மட்டும் படமாக்கியுள்ளேன்.
ரித்விகா, உதயா, தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா, ரங்கநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்கள் எழுத, ஜேவி இசையமைத்துள்ளார். விரைவில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.