பாலியல் தொல்லை விவகாரம்…!ரகுல் உங்கள் பல்லை உடைத்து கையில் கொடுப்பேன் …!ஸ்ரீ லீக்ஸ் நடிகை ஆவேசம் …!
கடந்த ஒருவாரமாக ஒரு சில இயக்குனர்கள், நடிகர்கள் மீது டோலிவுட் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் தொல்லை புகார் கூறி வருகிறார். இயக்குனர் சேகர் கம்முலா மீது அவர் புகார் கூறியபோது அதற்கு அவர் பதிலடி தரும் வகையில், ‘என் மீது புகார் கூறினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்.
அதற்கு பதில் அளித்த ஸ்ரீரெட்டி, ‘சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயார். என்னிடம் ஆதாரம் உள்ளது’ என்றார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் ‘நான் ஈ’ நடிகர் ஒருவரைப்பற்றி புகார் கூறினார் ஸ்ரீரெட்டி.
இந்நிலையில் தெலங்கானா முதல்வரை நேரில் சந்தித்து புகார் கூற அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் பொது இடத்தில் நிர்வாண போராட்டம் நடத்துவேன் என்றார். திடீரென்று நேற்று மதியம் ஐதராபாத் பிலிம் சேம்பர் அலுவலகம் எதிரே வந்தவர் திடீரென்று தனது ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்ற தொடங்கினார். 80 சதவீதம் ஆடைகளை களைந்தநிலையில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பிறகு ஸ்ரீரெட்டி கூறும்போது,’எனக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி கடந்த 1 மாதமாக நான் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறேன். அதுபற்றி பிலிம்சேம்பர் கண்டுகொள்ளவில்லை. பலர் எங்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்றபோதும் திரையுலகில் உள்ள மூத்த கலைஞர்கள் பேச மறுக்கிறார்கள். கடந்த பத்து, பதினைந்து வருடமாக இந்தி திரையுலகிலிருந்து தான் டோலிவுட் படங்களுக்கு நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்கிறார்கள்.
துணை நடிகைகள், அம்மா கதாபாத்திரங்களுக்கும் அவர்களைத் தான் அழைக்கிறார்கள். திறமைக்கு மதிப்பு கொடுப்பதில்லை. படங்களுக்கு நடிகைகளை சேர்த்துவிடும் காஸ்டிங் கவுச் பற்றி தெரியாது. அதுபோன்ற அனுபவம் தனக்கு இல்லை என்று ரகுல் ப்ரீத் சிங் கூறுகிறார். ரகுல் போன்றவர்கள் கோடிக்கணக்கில் சம்பளம்பெறும்போது காஸ்டிங் கவுச் பற்றி அவர்கள் எப்படி பேசுவார்கள். ஜிம் வைத்திருக்கிறார், வியாபாரத்தில் முதலீடு செய்கிறார், மும்பையில் பங்களாக்கள் வாங்குகிறார்.
அப்படியிருக்கும்போது எங்களைப்போன்றவர்களின் வலியை அவரால் எப்படி உணர முடியும். ஆடம்பர கார்களுடன் பாலிவுட் நடிகைகள் இங்கு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ரகுலுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். எங்களைப்போன்றவர்களின் போராட்டம்பற்றி தரக்குறைவாக பேசினால் அவரது பல்லை உடைத்து கையில் கொடுப்பேன். இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.