பாலியல் சக்தியை அதிகரிக்கும் மாத்திரை விளம்பரம் உத்தரவை மீறி ஒளிபரப்பு!சமையல் மந்திரம் திவ்யா புகார் !
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நீதிமன்ற உத்தரவையும் மீறி தான் நடித்த மாத்திரை விளம்பரம் ஒளிபரப்பப்படுவதாக சமையல் மந்திரம் நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யா புகார் அளித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த திவ்யா, சமையல் மந்திரம் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார். அப்போது, பாலியல் சக்தியை அதிகரிக்கும் மாத்திரை தொடர்பான விளம்பரத்தில் நடித்ததாகவும், 3 மாதம் மட்டுமே விளம்பரம் ஒளிபரப்பப்படும் கூறி விட்டு, 2 ஆண்டுகளாக ஒளிபரப்புவதாக கூறியுள்ளார். விளம்பரத்தை தடை செய்யக்கோரி, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அதன்படி, நீதிமன்றமும் விளம்பரத்தை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்தாக திவ்யா தெரிவித்துள்ளார். ஆனால், அந்த விளம்பரம் தொடர்ந்து ஒளிபரப்பப்படுவதால், அதை தடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திவ்யா மனு அளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.