பாய் பிரண்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட 2.0 நடிகை..!
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் சூடான படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது நடிகை எமி ஜாக்சனின் வழக்கம். சில தினங்களுக்கு முன்னால் தனது ஜோடி என்று ஒரு பெண்ணுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
எமி ஜாக்சன் ஓரின சேர்க்கையாளரா? என்று விவாதம் எழுந்தது. தற்போது ஒரு ஆணுடன் மிக நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டு இருக்கிறார். முத்தமிடும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும் அந்த ஆண் நண்பர் யார் என்பதை எமி குறிப்பிடவில்லை.
பிரபல ஹாலிவுட் நடிகர் கிம்பெர்லேவுடன் எமி நெருக்கமாக இருக்கும் படங்கள் சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்தன. எனவே அவராக இருக்கலாம் என்கிறார்கள். மதராச பட்டிணம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து இருக்கும் 2.0 வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.