பாபி சிம்ஹாவின் புதிய வெப் சீரிஸ்! ரிலீஸ் தேதி இதோ!!

Default Image

தமிழ் சினிமாவில் அசால்ட் சேதுவாக அனைவராலும் அறியப்பட்ட நடிகர் பாபி சிம்ஹா. அதன் பிறகு இவரது சோலோ நடிப்பில் வெளியான திரைப்படங்கள் சரியாக போகவில்லை. கடைசியாக சாமி இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிக்கும் பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஆன்லைன் வெப் சீரிஸ் ஒன்றிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த வெப் சீரிஸூக்கு வெள்ள ராஜா எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது அதன் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
இந்த சீரிஸ் இம்மாதம் (டிசம்பர்) 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த சீரிஸை அமேசான் ப்ரைம் வீடியோவில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானில் வெளியாகும் முதல் தமிழ் வெப் சீரிஸ் இதுவாகும்.
source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்